
ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு செப்டம்பரில் நிலுவை தொகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே குரோம்பேட்டையில் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் நடைபெற்றது.
குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி கழகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் தேவிதார், 47 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 94 நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்னர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாது:
இந்த பேச்சுவார்த்தையில் 50 ஓய்வூதிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் முன்வைத்தனர்.
ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு செப்டம்பரில் நிலுவை தொகை வழங்கப்படும்.
விரைவில் 13 வது ஊதிய குழு ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறைவுக்கு வரும்.
சென்னையில் எலெக்ட்ரிக் பேருந்து மாதிரி ஓட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் படுக்கைகளை கொண்ட அரசு பேருந்து நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் தேவையில்லாத செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் காலங்களில் போக்குவரத்து துறை சிறந்த துறையாக மாற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்கபடும்.
இந்த பேச்சுவார்த்தையில் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
ஊழியர்களுடன் வரும் 12 அல்லது 13 ஆம் தேதிகளில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.
இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.