உரிமம் இல்லாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை... மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

By vinoth kumarFirst Published Dec 5, 2018, 5:39 PM IST
Highlights

உரிமம் இல்லாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனுமதியி்ன்றி பெண்கள் விடுதிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

உரிமம் இல்லாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனுமதியி்ன்றி பெண்கள் விடுதிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

சென்னை ஆதம்பாக்கத்தில் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் பெண் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த பெண்கள் விடுதியை சஞ்சீவ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த விடுதியில் உள்ள பெண்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். யாருக்கும் தெரியாமல் சஞ்சீவ் என்பவர் கழிவறை, படுக்கையறை, துணி மாட்டும் கைப்பிடி (ஆங்கர்) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்களுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கேமராக்களை சஞ்சீவ் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையத்து அவரை கைது செய்தனர். 

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பெண்கள் விடுதிகள் நடத்துவோருக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளார். உரிமம் இல்லாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அனுமதியி்ன்றி பெண்கள் விடுதிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் பெண்கள் விடுதிகளுக்கு பாதுகாப்பாளராக பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுதிக்காப்பாளர்கள், பாதுகாவலர், பெற்றோர் ஆகியோருக்கு புகைப்படத்துடன் அடையாள அட்டை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் விடுதி நடத்த பதிவுச் சான்று மற்றும் உரிமத்தை மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 

50-க்கும் மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். மேலும் சிறு வயது குழந்தைகள், இளம்பெண்களை வீட்டிற்கு அனுப்பும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் தான் அனுப்ப வேண்டும். விடுதிக்காப்பாளர், பாதுகாவலர்கள் தொலைபேசி என் மற்றும் முகவரியை காப்பக முன் வாயிலில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

பதிவு செய்யப்படாத விடுதி... புகார் எண் அறிவிப்பு

டிசம்பர் 31-க்கு பின் பதிவு செய்யப்படாமல் இயங்கும் விடுதிகள் மற்றும் பிற விடுதிகளின் மீதான குறைகளை ஆட்சியரிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர். புகார்களை 9444841072 என்ற வாட்ஸ் அப் எண்ணில் விடுதிகளின் புகைப்படத்துடன் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-க்குள் பதிவு பெற்ற விடுதிகளின் பெயர் பட்டியல் முகவரியுடன் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் ஜனவரி 1-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்யாத விடுதிகளின் பெண்கள், குழந்தைகளை தங்க வைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

click me!