தமிழ்நாடு சார்களாலும், தம்பிகளாலும் தான் ஆட்சி செய்யப்படுகிறது.! வெளுத்து வாங்கும் எல் முருகன்

Published : May 22, 2025, 03:31 PM IST
l murugan

சுருக்கம்

பிரதமர் மோடி 103 ரயில் நிலையங்களைத் திறந்து வைத்தார். இதில் தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்கள் அடங்கும். மத்திய அமைச்சர் எல்.முருகன் பரங்கிமலை ரயில் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

 தவறு செய்தவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் - எல் முருகன் : நாடு முழுவதும் மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை ராஜஸ்தானில் இருந்து பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதில் தெற்கு ரயில்வேயில், மேம்படுத்தப்பட்டுள்ள பரங்கிமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, திருவண்ணாமலை, போளூர், சிதம்பரம், ஸ்ரீரங்கம், மன்னார்குடி, விருத்தாசலம், ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை, கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரா, திருவனந்தபுரம் மாவட்டம் சிராயின்கீழ், புதுச்சேரியில் மாஹே ஆகிய 13 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன .

ரயில் திட்டங்களை தொடங்கி வைத்த மோடி

அந்த வகையில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் இந்த திறப்பு விழாவில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தெற்கு ரயில்வேயில் 13 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப் பட்டிருக்கிறது. செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயிலையும் 14 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது என கூறினார்.

அண்ணா யூனிவர்சிட்டியில் நடந்த சம்பவத்திற்கு யார் எந்த சார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அரக்கோணத்தில் ஒரு சகோதரி திமுக நிர்வாகிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார் அதிலும் பல சார்கள் இருக்கிறார்கள் அந்த பல சார்கள் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழக காவல்துறை அந்த வழக்கை மூடி மறைக்க பார்க்கிறார்கள். 

திமுகவினரால் இளம்பெண் பாதிப்பு- சிபிஐ விசாரிக்கனும்

அரக்கோணத்தில் திமுக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அந்த சகோதரியுடன் பாஜக இருக்கிறது என தெரிவித்தார். பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு மிகப்பெரிய தண்டனை கிடைக்கப்பெற்றது போல அரக்கோணம் வழக்கும் சிபிஐ ஒப்படைக்கப்பட்டு இந்த சகோதரிக்கு நியாயம் கிடைக்கக்கூடிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றார்.

தம்பிகளின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது, அந்த சார்களுக்கும் தம்பிகளுக்கும் என்ன தொடர்பு என்பதை திமுக அரசு தெரிவிக்க வேண்டும். தம்பிகளுக்கும் திமுக குடும்பத்திற்கும் உள்ள நெருக்கம் என்ன என்பதை திமுக அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தம்பிகளும் சார்களும் தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிற நிலைமையை திமுக அரசாங்கம் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

அமலாக்கத்துறை வாதம் முடிவடையவில்லை

அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றம் கண்டனம் குறித்த கேள்விக்கு அமலாக்கத்துறை சட்டப்படியான அமைப்பு சுப்ரீம் கோர்ட் சட்டப்படி அந்த வழக்கை மேற்கொள்வார்கள். அமலாக்கத்துறையின் நியாயம் என்ன என்று அவர்கள் தரப்பு பதில் என்ன என்பதை நீதிமன்றத்தில் வைப்பார்கள். இந்த வழக்கில் இன்னும் முழுமையான வாதங்கள் நிறைவு பெறவில்லை என தெரிவித்தார். அமலாக்கத்துறை தங்கள் தரப்பு வாதத்தை முன் வைப்பார்கள். தவறு செய்தவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவார்கள் என பதில் அளித்தார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!