எழுத்தாளர் இமையத்துக்கு கன்னட தேசிய குவெம்பு விருது… தமிழுக்கு பெருமை சேர்த்தவர் என விருதுக்குழு பாராட்டு!!

By Narendran SFirst Published Nov 24, 2022, 7:57 PM IST
Highlights

மறைந்த கவிஞர் குவெம்பு நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் கன்னட தேசிய குவெம்பு விருது இந்தாண்டு எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த கவிஞர் குவெம்பு நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் கன்னட தேசிய குவெம்பு விருது இந்தாண்டு எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த கவிஞர் குவெம்பு நினைவாக ஆண்டுதோறும் கன்னட தேசிய கவி குவேம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கன்னட தேசிய குவெம்பு விருது எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை… காசோலைகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!!

இவர் இதுவரை 11 நாவல்களை எழுதியுள்ளார். மேலும் அவரது 2 சிறுகதை தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. அவர் எழுதிய நாவல்களில் கோவேறு கழுதைகள், செடல், செல்லாத பணம் ஆகிய நாவல்கள் பெரிய அங்கீகாரத்தை பெற்றன. மேலும் அவர் எழுதிய கதைகளில் பெத்தவன் என்ற சிறுகதை தமிழில் அதிகம் அச்சிடப்பட்ட கதைகளில் ஒன்றாக திகழ்கிறது. இவரின் செல்லாத பணம் நாவலுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: அரை வேக்காடுத்தனமாக அவசரக்கோலத்தில் கருத்து சொல்லும் ஆளுநர் ரவி..! கே.எஸ். அழகிரி ஆவேசம்

இந்த நிலையில் இந்தாண்டுக்கான கன்னட தேசிய கவி குவேம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அவருக்கு விருதுடன் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்தவர் இமையம். அவரின் பெரும்பாலான எழுத்துக்கள் பெண்ணியத்திற்கான காணிக்கையாகக் கருதலாம் என விருதுக்குழுவினர் எழுத்தாளர் இமையத்தை பாராட்டியுள்ளனர்.

click me!