குழந்தைக்கு நாக்குக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்தது ஏன்.? மதுரை அரசு மருத்துவமனை விளக்கம்

By Ajmal KhanFirst Published Nov 24, 2022, 12:04 PM IST
Highlights

குழந்தைக்கு சிறுநீர் பாதையில் முன் தோல் குறுக்கமாக இருந்ததால் மீண்டும் ஒரு முறை மயக்க மருந்து கொடுக்கப்படாமல் பிறப்புறுப்பில் சுன்னத் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் ராஜாஜி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

குழந்தைக்கு பிறப்புறுப்பில் ஆப்ரேசன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்- கார்த்திகா தம்பதியின் ஒரு வயது குழந்தைக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நாக்கு சரிவர வளராத காரணத்தால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர்களை அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் குழந்தைக்கு கடந்த வாரம் ராஜாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தந்தை புகார் செய்யப்பட்டதையடுத்து அவசர அவசரமாக மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தமிழக உரிமையை பறிக்கும் ஆளுநரை புகழுறீங்களே.. உங்களை என்ன சொல்வது.. எடப்பாடியாரை விளாசும் கனிமொழி.!

விளக்கம் அளித்த மருத்துவமனை

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தந்தை காவல்நிலையத்திலும்,  ராஜாஜி மருதுதவமனை டீனிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பாக நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு ராஜாஜி மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், குழந்தைக்கு நாக்கு ஒட்டியிருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்ததையடுத்து வெற்றிகரமாக நாக்கிற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தைக்கு சிறுநீர் பாதையில் முன் தோல் குறுக்கமாக இருந்ததால் மீண்டும் ஒரு முறை மயக்க மருந்து கொடுக்கப்படாமல் பிறப்புறுப்பில் சுன்னத் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை நல்ல முறையில் உணவு உண்பதாவும், சிறுநீர் கழிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

அழுத்தங்களுக்கு அரசு பணியக் கூடாது..! இதற்கான அனுமதியை உடனே ரத்து செய்தே தீர வேண்டும்- ராமதாஸ் ஆவேசம்

click me!