பினாமி அரசை கவிழ்க்க அனைவரும் தயார்… நடிகை குஷ்பூ சவால்…

 
Published : Feb 25, 2017, 07:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
பினாமி அரசை கவிழ்க்க அனைவரும் தயார்… நடிகை குஷ்பூ சவால்…

சுருக்கம்

பினாமி அரசை கவிழ்க்க அனைவரும் தயார்… நடிகை குஷ்பூ சவால்…

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க திமுக மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தயாராக உள்ளதாகவும், சிறை குற்றவாளிகள் கட்டுப்பாட்டில் உள்ள அரசு யாருக்கு வேண்டும்? என்றும் நடிகை  குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் சசிகலாவை யாருமே விரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து சசிகலா ஓபிஎஸ் இடையே நடைபெற்ற அதிகாரப் போட்டியில் பொது மக்களும், தொண்டர்களும் ஓபிஎஸ்ஐ ஆதரித்தனர்.

ஆனால் 122 எம்எல்ஏக்களின் துணையுடன் சசிகலா ஆதரவு  எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது குறித்து நடிகை  குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், நான் மும்பை சென்று வருவதற்குள் மாஃபியா கும்பல் ஆட்சியை பிடித்துவிட்டதே என தெரிவிந்திருந்தார்.

குஷ்பூவின் டுவிட்டுக்கு ஏராளமானோர் அவரை கேலி செய்து கமெண்ட செய்திருந்தனர்.

இதனால் கோபமடைந்த நடிகை குஷ்பு மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக பதிவிட்டுள்ளார், தற்போது மீண்டும் மாஃபியா கும்பல் ஆட்சி என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க திமுக மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் தயாராக உள்ளது என்றும், சிறையில் உள்ள குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மாபியா அரசு யாருக்கு வேண்டும்? எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!