
இந்த நிலையில் நேற்று, அவர் சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘எனது பெயர் சதீஷ் கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வந்தது. அதன் விளைவாக நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் செய்யப்பட்டு வீட்டில் இருந்து வருகிறேன். முதல்நாள் பணி முடித்து இரவு ஒன்று முப்பது மணிக்கு வீட்டிற்கு சென்றேன்.
மறுநாள் காலை நான்கு முப்பது மணிக்கு மணிக்கு ஆஜராகி தொடர்ந்து தெலுங்கானா கவர்னர், மற்றும் தமிழக சீப் செகரட்டரி பந்தோபஸ்துக்காக, அவிநாசி சாலையில் பணியமர்த்தப்பட்டு பணியில் இருந்து வந்தேன். கோவை அவிநாசி சாலையில் மேம்பால பணிகள் நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் மிகவும் கடுமையாக இருந்து வந்தது. அதற்கு மத்தியிலும் மிகவும் கடுமையாக பணி செய்து போக்குவரத்தை சீர் செய்து வந்தேன். கான் வாய் பணியின்போது போக்குவரத்தை மிகவும் கடுமையாக சீர் செய்து கொண்டிருந்தபோது, ஒரு பள்ளி வாகனத்தை மூன்று நபர்கள் இடைமறித்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினார்கள்.
நான் சென்று அங்கு விசாரித்த பொழுது, அந்த பள்ளி வாகனம் அவர்களை இடிதாதாகவும் கூறினார்கள். அவர்களை அந்த பள்ளி வாகனம் இடித்தாக தெரியவில்லை. அது சம்பந்தமாக வழக்கு ஏதும் இதுவரை பதியவில்லை, நடுவழியில் போக்குவரத்தை ஏற்படுத்திய ஒரு நபரை நான் ஓரமாக அழைத்த பொழுது அவர் வர மறுத்து விட்டார்.நான் ஒரு போக்குவரத்துக் காவலர் கான்வாய் வரும்பொழுது அதை சீர் செய்து அனுப்புவது என்னுடைய கடமை என்று நான் கூறியபோதும், அதை அவர் மதிக்காமல் என்னை கேவலமாக பேசினார்.
உங்களுக்கு கான்வாய் பணிதான் முக்கியமா என்று என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். நான் அந்த நேரத்தில் உடனடியாக போக்குவரத்தை சீர் செய்வதற்கு வேறு வழியில்லாமல் அவரை ஓரமாக தள்ளி இரண்டு அடி அடித்து போக்குவரத்தை உடனடியாக சீர்செய்து காண்வாய் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் அனுப்பிவைத்தேன். ஒருவேளை நான் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் கான்வாய் மற்றும் உயர் அதிகாரிகளின், வாகனங்கள் அங்கு நின்று இருக்கும். அவ்வாறு நடந்திருந்தால் என்னை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து இருப்பார்கள். இதில் நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை.
நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் என் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து இருக்கலாம் அதற்கு மாறாக என்னை எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் சஸ்பெண்ட் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே என்னுடைய சகோதரர் காவலர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், பணியின்போது இது போன்ற நல்ல காரியங்கள் எதுவும் செய்ய வேண்டாம். அவ்வாறு நீங்கள் செய்தாலும் உங்களை எந்த உயரதிகாரிகளும் காப்பாற்ற மாட்டார்கள். நம்முடைய குறைகளை கேட்பதற்கு இங்கு யாரும் இல்லை. உங்களுடைய குடும்பங்களை மனதில் வைத்துக்கொண்டு மாத சம்பளம் வந்தால் போதும் என்று பணி செய்தால் உங்களுக்கு மிகவும் நல்லது.
உண்மையில் இதில் பாதிக்கப்படுவது பொது மக்களே காவலர்களின் கைகள் கட்டப்பட்டு விட்டது. குற்றங்கள் நடைபெறும் பொழுது எந்த காவலர்களும் அதை தட்டிக் கேட்க மாட்டார்கள் குற்றங்கள் மிகவும் அதிகரித்துக் கொண்டேதான் செல்லும். எனவே என்னுடைய சகல காவலர்களே இனி வரும் காலங்களில் மிகவும் கவனமாக பணி செய்யவும். உயர் அதிகாரிகள் பொதுமக்கள் மீடியா என அனைவருக்கும் நாம் பயந்து வேலை செய்வது மிகவும் கடினமான செயல் மற்ற அரசு ஊழியரை போல் வேலை செய்வது நமக்கு மிகவும் நல்லது எனவே இனிவரும் காலங்களில் அனைவரும் சிந்தித்து செயல்படுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : Vikram: பத்தல, பத்தல..விக்ரம் படத்துக்கு சவுண்ட் பத்தல.! கடுப்பான ரசிகர்கள்.. தியேட்டரில் ரகளை !
இதையும் படிங்க : பெண்கள் ஹாஸ்டலில் ரகசிய கேமரா..1,000க்கும் மேற்பட்ட வீடியோஸ்.. சிக்கிய ஹார்ட் டிஸ்க்.! போலீஸ் ஷாக் !