என் மண் என் மக்கள் என்று, தமிழகத்தில் பாதயாத்திரை சென்றுள்ள அண்ணாமலைக்கு தமிழக மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று புதுச்சேரியில், இயக்குனர் கௌதமன் தெரிவித்தார்.
நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் பாதயாத்திரை செல்லவுள்ளார் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை அவர், இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரைப்பட இயக்குனர் கௌதமன் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நெய்வேலியில் நடைபெற்ற கலவரம் காவல்துறையின் அத்துமீறால் தான் நடைபெற்றுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார். தூத்துக்குடி கலவரத்தை அரசே முன் நின்று நடத்தியது போல், நெய்வேலியிலும் கலவரத்தை அரசே முன்னின்று நடத்தியதாகவும் குற்றம் சாட்டிய அவர், தண்ணீர் பிச்சி அடித்தது, கண்ணீர் புகை குண்டு வீசி எல்லாம் சரி, ஆனால் உரிமை கேட்டு போராடியர்கள் மீது ஏன் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பினர்.
undefined
1956ம் ஆண்டு 96 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏழை மக்களை ஏமாற்றி குறைவான விலையில் என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தியது. ஆனால் அப்போது வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும், நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் இதுவரை அவை வழங்கப்படவில்லை, இந்நிலையில் மீண்டும் இப்பொது நிலம் எடுப்பதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
AC மற்றும் Sleeper இருக்கைகள்.. ரயிலில் தூங்கும் நேரம் மாற்றம் - மேலும் பல முக்கிய தகவல்கள்!
நிலம் எடுக்கும் முடிவை NLC நிர்வாகமும், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு கைவிட வேண்டும், அப்படி இல்லை என்றால் என்எல்சியின் செயல்பாட்டை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும், இதே நிலை நீடித்தால் என்.எல்.சியில் ஒரு செங்கல் கூட மிஞ்சாது என்றும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நடைபெற்றது போல் கலவரக்காரர்கள் திட்டமிட்டு நெய்வேலியில் கலவரத்தை அரங்கேற்றி உள்ளார்கள் இந்த கலவரத்துக்கு யார் காரணமானவர்கள் என்பது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட இயக்குனர் கெளதம்.
மேலும் அண்ணாமலையில் பாதயாத்திரை குறித்து அவர் பேசும்போது, அண்ணாமலை போன்று மிகப்பெரிய நடிகன் யாரும் இருக்க முடியாது, என் மண் என் மக்கள் என்று யாத்திரை செல்கிறார், எது அவர் மண்? என்று கேள்வி எழுப்பிய அவர், கர்நாடகாவில் இருக்கும் போது என் உயிர் மூச்சு கன்னடம் தான் என்று தெரிவித்த அண்ணாமலை, தற்போது தமிழ்நாட்டில் என் மண் என் மக்கள் என்று யாத்திரை செல்வது வேடிக்கையாக இருக்கிறது.
230 நாள் பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலைக்கு தமிழக மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்று தெரிவித்தார். அண்ணாமலை போன்றவர்கள் மத்திய அரசின் ஏஜெண்டாகவும் செயல்பட்டு தமிழ்நாட்டை அடகு வைக்க முயல்வதாக இயக்குனர் கௌதமன் கடுமையாக பேசினார்.