பாத யாத்திரையில் மீனவக் குடும்பங்களைச் சந்தித்து உரையாடிய அண்ணாமலை

By SG Balan  |  First Published Jul 29, 2023, 7:43 PM IST

என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் கோவில்வாடி கிராமத்திற்குச் சென்ற அண்ணாமலை, அங்குள்ள மீனவ மக்களைச் சந்தித்து உரையாடி இருக்கிறார்.


என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் கோவில்வாடி கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள மீனவ சமுதாய மக்களைச் சந்தித்ததாக என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் ஒன்பதாண்டு கால ஆட்சியில், மீனவர்களுக்காகக் கொண்டு வந்துள்ள நலத் திட்டங்கள் குறித்தும், மீனவ சகோதர சகோதரிகளுடன் அரசு சார்ந்த தேவைகள் குறித்தும் உரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

undefined

கட்டுக்கட்டாக காரில் வந்து இறங்கிய கோப்புகள்! ஆர்.டி.ஐ. கொடுத்த 40,000 பக்க பதில்!

இந்தச் சந்திப்பில், பாஜக  சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி மற்றும் தமிழ்நாடு பாஜக மீனவர் அணி தலைவர் எம்.சி.முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் கோவில்வாடி கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள மீனவ சமுதாய மக்களைச் சந்தித்தோம்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு அவர்களின் ஒன்பதாண்டு கால நல்லாட்சியில், மீனவர்களுக்காகக் கொண்டு வந்துள்ள நலத் திட்டங்கள் குறித்தும்,… pic.twitter.com/QzcwTdG3Lj

— K.Annamalai (@annamalai_k)

இதனிடையே, அண்ணாமலையின் பாத யாத்திரையை 'பாவ யாத்திரை' என்று சாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையிலும் ட்விட்டரில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அதில், திமுக தான் தமிழ் மக்களை வஞ்சித்து பாவங்களைச் சேர்ந்துக்கொண்டிருக்கிறது என்றும் இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமேஸ்வரம் கடலில் முங்கி சிவனை வழிபட்டு பாவத்தைக் கழிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

திமுகதான் கச்சத்தீவை இலங்கைக்கு பரிசாகக் கொடுத்துவிட்டது என்று குறைகூறியுள்ள அண்ணாமலை, 2009இல், இலங்கையில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் சகோதர, சகோதரிகள் கொல்லப்பட்டனர். அப்போது தனது தந்தையுடன் அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மும்முரமாக இருந்தவர் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக தமிழ் மக்களை தூண்டிலாகப் பயன்படுத்தி பல பாவங்களைச் சேர்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமேஸ்வரத்துக்கு பாவ யாத்திரை செய்து, புனித நீராடி, சிவபெருமானிடம் மன்னிப்பு பெறவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.

'பாவ யாத்திரை' என விமர்சித்த ஸ்டாலின்... பங்கமாக பதிலடி கொடுத்த அண்ணாமலை

click me!