கொடநாடு கொலை வழக்கு...! சசிகலா வழக்கறிஞரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

Published : Aug 30, 2022, 09:31 AM IST
கொடநாடு கொலை வழக்கு...! சசிகலா வழக்கறிஞரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

சுருக்கம்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

கொடநாடு கொலை வழக்கு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை நடந்தது. இந்த கொள்ளை தடுக்கமுயன்ற வீட்டு காவலாளி ராம்பகதூர் கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து இறந்தது நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள், அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 300க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. 

திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு குட்டி சுவராகியுள்ளது... அண்ணாமலை கடும் விமர்சனம்!!

சசிகலா வழக்கறிஞரிடம் விசாரணை

மேலும் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர்கள் குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ்,சயான் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர்.  இதன் ஒரு பகுதியாக இன்று, சசிகலா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவரும், டிடிவி தினகரனின் நண்பருமாகிய நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் தனிப்படை போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சசிகலா குடும்பத்தில் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்பதால் கொடநாடு பங்களாவுக்குள் சென்று வந்திருப்பார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் கொடநாடு பங்களா தொடர்பாக தனிப்படை போலீசாரின் கேள்விக்கு வழக்கறிஞர் செந்தில் பதில் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கவிஞர் சினேகன் அவமானப்படுத்தி விட்டார்..! மன்னிப்பு கேட்டே ஆகணும்... நடிகை ஜெயலட்சுமி ஆவேசம்


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்