
தமிழகத்தில் கேரளாவின் மருத்துவக் கழிவுகளை கொட்டிவிட்டு, தமிழகத்தில் இருந்து 20 மூட்டை ரேசன் அரிசிகளை கேரளாவிற்கு கடத்த முயன்றதை காவல்துறையினர் சோதனையின்போது கண்டறிந்தனர்.
திருவிதாங்கோடு அருகே பறக்கும் படை காவல்துறையினர் சுற்றுப்பார்வை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் வந்த மாருதி காரின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாருதி காரை தடுத்தனர் காவல்துறையினர்.
அந்த கார் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து பறக்கும் படை தலைமை காவலர்கள் கிறிஸ்டோபர், அசோக்குமார் ஆகியோர் மாருதி காரை விரட்டி சென்றனர்.
தாங்கள் பின்தொடரப்படுவதை அறிந்த கார் ஓட்டுநர் மற்றும் காரில் இருந்தவர் இருவரும் காரை மணலியில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
பறக்கும் படை காவல்துறையினர் மாருதி காரை சோதனையிட்டபோது, அதில் 20 மூட்டைகளில் ரேசன் அரிசி கடத்திச் சென்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து தக்கலை காவல்நிலையத்தில் ஓப்படைத்தனர்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர். ஆனால், நம் தமிழகத்தின் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரிசி, கேரளாவிற்கு கடத்தப்படுகிறது என்பது வருத்தமளிக்கூடியதாக இருக்கிறது.
மேலும், இதேபோன்று தமிழக ரேசன் அரிசிகள், கர்னாடகம் மற்றும் ஆந்திராவிற்கும் கடத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு முறை காவல்துறையினர், கடத்தப்படும் ரேசன் அரிசியை மட்டுமே பிடிக்கின்றனர். கடத்தல் காரர்களை பிடிப்பதில்லை. அப்படியே பிடித்தாலும், அது மூன்றில் ஒரு பங்காகவே கணக்கு காட்டப்படுகிறது…