
உதகை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவியை கலைக்கக் கோரி வங்கி உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மைநிலைமட்டம் கிராமத்தில் உள்ள கீளுர் தொடக்க கூட்டுறவு வங்கியில் பெங்கால் மட்டம், மைநிலைமட்டம், மாசிக்கண்டி உட்பட ஆறு கிராமத்தைச் சேர்ந்த் 1400 பேர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் வங்கி உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் தொகையினை 70 சதவீதம் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எடுத்து அவர்கள் குடும்பத்தார்கள், நண்பர்கள் போன்றவர்களுக்கு கடன் வழங்கி வருகின்றார்கள். இதில் 30 சதவீதம் மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கி வருவதாக வங்கி உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே இதனை கண்டித்து வங்கியின் நிர்வாக்குழு உறுப்பினர்களை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி 100-க்கும் மேற்பட்டோர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நீலகிரி கூட்டுறவு துறை பதிவாளர் முகமது மீரான் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்த பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.