காசா கிராண்டே நிர்வாக இயக்குனர் அதிரடி கைது ...! வீடு வாங்க பதிவு செய்தவர்களுக்கு பிரச்சனை..?

 
Published : Apr 05, 2017, 05:52 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
காசா  கிராண்டே நிர்வாக  இயக்குனர் அதிரடி கைது ...! வீடு வாங்க  பதிவு செய்தவர்களுக்கு பிரச்சனை..?

சுருக்கம்

casa grande ceo arrested

பிரபல கட்டுமான நிறுவனமான காசா  கிராண்டே நிர்வாக  இயக்குனர் அதிரடியாக கைது செய்யப் பட்டுள்ளார் .

சென்னை,  பெங்களூர், கோயம்பத்தூர் உள்ளிட்ட பல முக்கிய  மாநகரங்களில் கட்டுமான தொழிலில் இந்த  நிறுவனம் ஈடுபட்டு வருகிறது .

இந்த நிறுவனத்தை  பொறுத்தவரையில்  மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது. கட்டுமானத்தில்  சிறந்து விளங்குவதிலும், புது புது மாடல்களில்  வீடுகளை  கட்டி தருவதிலும்  புகழ் பெற்றது  இந்த  நிறுவனம் .

இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் தங்கள் கட்டுமான தொழிலை தொடங்கியுள்ள, காசா  கிராண்டே நிறுவனம், சென்னையில் பல இடங்களில் நில மோசடியில் ஈடுபட்டதாக நிர்வாக இயக்குனர் அனிருதன்  உள்பட  மேலும் இருவரை  மத்திய  குற்றபிரிவு  போலீசார் அதிரடியாக கைது செய்தனர் . 

இதனால், இந்த நிறுவனத்தில் வீடு  வாங்க  முன்பதிவு செய்துள்ளவர்கள் பாதிக்கப்படுவார்களா  என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது மக்கள் மத்தியில்  இந்த விவகாரம்   பெரும் சர்ச்சையை  கிளப்பியுள்ளது .

 

PREV
click me!

Recommended Stories

சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!
நடிகர் விஜய்யை விட அரசியல்வாதி விஜய் மிகவும் பவர்புல்லானவர்.. அருண்ராஜ் எச்சரிக்கை..!