
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்திருத்த
சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது..
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயல்லிதா உயிரிழந்தாலும் அவருக்கு
விதிக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாயை வசூலிப்பது குறித்து
உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல்
செய்யப்பட்டிருந்தது.
உயிரிழந்ததால் சிறைத்தண்டனையில் இருந்து ஜெயலலிதா தப்பி இருந்தாலும்
அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராத்ததை வசூலிக்க வேண்டும் என்று
சீராய்வு மனுவில் கர்நாடக அரசு தெரிவித்திருந்தது.
இவ்வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ்,
அமித்தவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று நடைபெற்றது.
அப்போது ஜெயலலிவதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூசலிப்பது
குறித்த மனுவை தள்ளபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.