எதுக்கு இந்த அவசரகதியில் வழக்கு! யாரைக் காப்பாற்ற? இது ஆணவத்தின் உச்சம் ஸ்டாலின்! நயினார் நாகேந்திரன்!

Published : Sep 30, 2025, 11:02 AM IST
Nainar Nagendran

சுருக்கம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சதி நடந்திருப்பதாக தவெக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக அரசின் நடவடிக்கையை பாசிசத்தின் உச்சம்.

தமிழகத்தில் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருது கரூர் சம்பவம் தான். 41 உயிரிழப்பு சம்பவத்திற்கு தவெக விஜய் தான் காரணம் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் கரூர் சம்பவத்தில் சதி நடந்திருப்பதா அதிமுக, பாஜக, பாமக, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா: கரூர் கூட்ட நெரிசல் ஒரு சாதாரண விபத்து அல்ல, இது திட்டமிட்ட சதிச்செயல். குறிப்பாக, ஆளும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜிக்கு இச்சம்பவத்தில் நேரடித் தொடர்பு உள்ளது, விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

நயினார் நாகேந்திரன் கண்டனம்

இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீஸ் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கரூர் துயரம் சம்பவம் தொடர்பாக தவறான தகவல் பரப்பிய வழக்கில் பாஜக மாநில நிர்வாகி சகாயம், தவெக உறுப்பினர் சிவனேசன் மற்றும் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வதந்தி பரப்பியதாகக் கூறி 25 சமூக வலைதளக் கணக்காளர்கள் மீது திமுகவின் ஏவல்துறை வழக்கு பதிந்து 3 பேரைக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என ர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கரூர் கூட்ட நெரிசல் குறித்து வதந்தி பரப்பியதாகக் கூறி 25 சமூக வலைதளக் கணக்காளர்கள் மீது திமுகவின் ஏவல்துறை வழக்கு பதிந்து 3 பேரைக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

அவசரகதியில் வழக்கு பதிவது எதனை மூடி மறைக்க?

ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளபோது சகோதரத்துவத்துடன் தோள் கொடுப்பதைவிட்டு சர்வாதிகாரத்தைக் கையில் எடுப்பது தான் திராவிட மாடலா? அசாதாரண நிலையின்போது அதற்குக் காரணமானவர்களை நேர்மையான விசாரணை மூலம் கண்டுபிடிப்பதைவிட்டு, மக்களைத் திசைதிருப்புவதற்கு, உயிர் பிழைத்தோரைக் கைது செய்வது நியாயமா? இப்படி அவசரகதியில் வழக்கு பதிவது எதனை மூடி மறைக்க? யாரைக் காப்பாற்ற?

பாசிசத்தின் உச்சம்

தன்னால் நிகழ்ந்த தவறைத் திரையிட்டு மறைக்க தன்னைக் கேள்வி கேட்போரை எல்லாம் கைது செய்து எதிர்க்குரலை முடக்கப் பார்ப்பது பாசிசத்தின் உச்சம். சிபிஐ விசாரணை கோரி, உண்மையைக் கண்டறிந்து, இறப்புக்கான நீதியைப் பெற்றுத் தருவது மட்டுமே பலியான 41 அப்பாவி மக்களுக்கு ஒரு பொறுப்பான அரசு செலுத்தும் உண்மையான அஞ்சலி! இதனை திமுக அரசு உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!