'பாரில்' அடிதடி விவகாரம்! கருணாஸ் நண்பர்கள் கைது!

 
Published : Nov 16, 2017, 04:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
'பாரில்' அடிதடி விவகாரம்! கருணாஸ் நண்பர்கள் கைது!

சுருக்கம்

Karuna friends arrested

முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் எம்.எல்.ஏ. கருணாஸின் நண்பர்களிடையே ஏற்பட்ட அடிதடி தகராறு காரணமாக அஜய் என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.எல்.ஏ. கருணாஸின் நண்பர்கள், சென்னை, எம்.ஆர்.சி. நகரில் உள்ள பார் ஒன்றுக்கு சென்றுள்ளனர். பாரில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, நண்பர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு அடிதடி தகராறு ஏற்படும் வகையில் சென்றுள்ளது. 

சென்னை, எம்.ஆர்.சி. நகரில் உள்ள சாமர்செட் பார் ஒன்றில் சனிக்கிழமை இரவு நடிகர் கருணாஸ் மற்றும் கட்சியின் நிர்வாகியான டிபெண்டர் தாமோதர கிருஷ்ணன் உள்ளிட்டோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் தொழிலதிபரான பரணீஸ்வரன் என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

தன்னிடம் பேசாத தொழிலதிபர் பரணீஸ்வரனின் மீது ஆத்திரமடைந்த தாமோதரன் கிருஷ்ணன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுக்குள் நடந்த இந்த வாக்குவாதம் முற்றி பின் சண்டையாக மாறியது. தாமோதரன் கிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்தவர்கள் பரணீஸ்வரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்த பரணீஸ்வரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காயமடைந்த பரணீஸ்வரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையடுத்து, கருணாஸின் நண்பர்கள் அஜய், தாமோதரன் மற்றும் அவர் நண்பர்கள் மீது தவறான செய்கை, தப்பான வரிகளை உபயோகித்து பொது இடத்தில் பாடுவது, அபாயகரமான ஆயுதங்களுடன் மற்றவரை தாக்குவது, பொது இடத்தில் தவறாக நடந்து கொள்வது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!