கருணாநிதி டிஸ்சார்ஜ் - கோபாலபுரமா?, சிஐடி காலனியா ?

First Published Dec 23, 2016, 12:52 PM IST
Highlights


கருணாநிதி டிஸ்சார்ஜ் - கோபாலபுரமா?, சிஐடி காலனியா ?

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக இரண்டாஅவது முறையாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசக்கோளாறு, நுரையீரல் தொற்று காரண்மாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு ட்ரக்யொஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து சுவாசப்பிரச்சனைசீரானது.

இதையடுத்து உடல்நிலை தேறிவந்த கருணாநிதியை அரசியல் கட்சித்தலைவர்கள் திரையுலகப்பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். தற்போதுகருணாநிதி பூரண குணமடைந்து விட்டதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பின்னர் இரண்டுநாட்களுக்கு முன்னர் அவர் டிவி பார்ப்பது போன்ற படத்தை காவிரி மருத்துவமனைநிர்வாகம் வெளியிட்டது.

இந்நிலையில் இன்று மதியம் கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்துக்குபோகிறாரா? சிஐடி காலனி இல்லத்துக்கு போகப்பொகிறாரா? எனபது தான் தற்போது பிரச்சனையாக் உள்ளது.

கனிமொழி தந்தையை சிஐடி காலனி வீட்டுக்கு அழைத்து செல்ல விரும்புகிறார். காரணம் கோபாலபுரத்தில் அவரை கவானித்துகொள்ள ஆள் இல்லை, தயாளு அம்மாளுக்கும் முடியவில்லை சிஐடி காலனியில் ராஜாத்தி அம்மாள் பார்த்துகொள்வார் என்று கூறியுள்ளார்.

ஆனால் சிஐடி காலனிக்கு கருணாநிதி போனால் முற்றிலும் தனது கட்டுப்பாடு போய்விடும் , கனிமொழியும் , அழகிரியும் கருணாநிதி மனதைமாற்றிவிடுவார்கள் , சிஐடி காலனி வீட்டுக்கும் தான் போய் கருணாநிதியை பார்க்க முடியாது என்பதால் கோபாலபுரத்திலேயே அவரை தங்க வைக்கநினைக்கிறார் ஸ்டாலின்.

எப்போதும் ஸ்டாலின் கையே ஓங்கி இருப்பதால் கருணாநிதி கோபாலபுரத்திற்கு தான் அழைத்து செல்லப்படுவார் என தெரிகிறது.

 

click me!