“தீப்பொறி ஆறுமுகத்தின் பேச்சை கேட்கவே தனி கூட்டம் கூடும்” – கருணாநிதி இரங்கல்

 
Published : Nov 07, 2016, 03:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
“தீப்பொறி ஆறுமுகத்தின் பேச்சை கேட்கவே தனி கூட்டம் கூடும்” – கருணாநிதி இரங்கல்

சுருக்கம்

தீப்பொறி ஆறுமுகத்தின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தலைமைக் கழக முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரும்,  தி.மு.கழக முன்னோடிகளில் ஒருவருமான மதுரை தீப்பொறி ஆறுமுகம் அவர்கள் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு (5-11-2016) மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தியதாக தெரிவித்துள்ளார்.

தீப்பொறி ஆறுமுகம்  தனது பதினைந்தாவது வயதிலேயே  தந்தை பெரியார் அவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி, பெரியாரால்  அப்போதே பாராட்டப்பட்டவர். அவருடைய பேச்சைக் கேட்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் அவருக்கு “தீப்பொறி”  என்ற அடைமொழியைக் குறிப்பிட்டு,  பின்னர் காலப்போக்கில் “தீப்பொறி” என்றாலே அவரைக் குறிப்பிடும் அளவிற்கு பெயர் பெற்றுவிட்டார். 

“மிசா” கைதியாகவும் தீப்பொறி ஆறுமுகம் சிறைவாசம் அனுபவித்தவர். தீப்பொறி ஆறுமுகத்தின் பேச்சினைக் கேட்பதற்காகவே தனி கூட்டம் கூடுவதுண்டு. தீப்பொறி ஆறுமுகத்தின் மறைவு குறித்து பெரிதும் வருந்துவதோடு, அவருடைய குடும்பத்தினருக்கும்,  நண்பர்களுக்கும் கருணாநிதி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!