கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

Published : Aug 26, 2023, 09:47 PM IST
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

சுருக்கம்

சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் வருகிற செப்டம்பர் மாதம் 15 முதல் 27 ஆம் தேதி வரை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து செல்ல டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் இதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். மேலும், இந்த உத்தரவானது நடந்து வரும் விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மத்திய அமைச்சராக இருந்த தன்னுடைய தந்தை ப.சிதம்பரத்தின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தனக்கு வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், செப்டம்பர் 18 முதல் 24 வரை பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ட்ரோபஸ் நகரில் நடைபெறவுள்ள செயின்ட் ட்ரோபஸ் ஓபன் என்ற புகழ்பெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர், லண்டனில் பணியாற்றி வரும் தனது மகளை காண அங்கு செல்ல வேண்டும் என்பதால் அவ்விரு நாடுகளுக்கும் செல்ல அனுமதி வேண்டும் என கோரியிருந்தார்.

சைக்கிள் திருடிய வழக்கு: 38 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட நபர்!

மேலும், ஏடிபி போட்டிகளின் இணை அமைப்பாளரான அவரது நிறுவனம் டோட்டஸ் டென்னிஸ் லிமிடெட் இணைக்கப்பட்டுள்ளதால், லண்டனில் சில கூட்டங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையின் போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு தருவதில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ரூ.1 கோடி பாதுகாப்பு வைப்புத் தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டு, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்துள்ளது. வெளிநாடு செல்லும் முன்னர், அவரது பயணத் திட்டத்தை முறைப்படுத்தி, பதிவு செய்யுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அவர் தங்கியிருக்கும் இடங்கள் அல்லது ஹோட்டல்களின் விவரங்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள அவரது தொடர்பு எண்கள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்