“3 நாள் லீவு முடியலப்பா...” - வெளிமாநில பார்களில் மூழ்கிய தமிழக 'குடி'மகன்கள்

Asianet News Tamil  
Published : Dec 09, 2016, 08:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
“3 நாள் லீவு முடியலப்பா...” - வெளிமாநில பார்களில் மூழ்கிய தமிழக 'குடி'மகன்கள்

சுருக்கம்

தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு,3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், கர்நாடகா பார்களில், தமிழக, 'குடி'மகன்கள் படையெடுத்தனர்.

ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 10 கி.மீ.க்கு, 'ரிங் ரோடு' அமைக்கப்பட்டுள்ளது. இதில், சிறிது துாரம் வரை, சாலையின் ஒருபுறம் கர்நாடக எல்லையும், மறுபுறம் தமிழக எல்லையும் உள்ளது.

கர்நாடக எல்லையில், தனியார் சார்பில் மது பார்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, தமிழகத்தில், 3 நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால், ஓசூர் பகுதி வாலிபர்கள் பலர், 'ரிங் ரோட்'டில் உள்ள கர்நாடக மாநில பார்களுக்கு படையெடுத்தனா.

இதேபோல், தமிழக எல்லையில் உள்ள கர்நாடக பார்களில், தமிழக பகுதி, 'குடி'மகன்கள் மது அருந்தி சென்றனர்.

இதேபோல் திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் ஆந்திர எல்லையில் உள்ள ஆந்திர மதுக்கடைக்கு சென்று, போதையில் மூழ்கினர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live Today 1 January 2026: Panchagrahi Yog - புத்தாண்டில் நடக்கும் அதிசயம்.! ஒரே ராசியில் அமரும் 5 கிரகங்கள்.! இந்த ராசிகளுக்கு தங்க புதையல் கிடைக்கப்போகுது.!
முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!