கூடலூர் அருகே சோகம் - யானை தாக்கி பெண் பலி

 
Published : Dec 09, 2016, 07:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
கூடலூர் அருகே சோகம் - யானை தாக்கி பெண் பலி

சுருக்கம்

கூடலூர் அருகே, யானை தாக்கி பெண் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், தர்மகிரியை சேர்ந்தவர் லீனா (47). நேற்று காலை லீனா, அவரது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது, அருகில் உள்ள காட்டில் இருந்து வெளியே வந்து பதுங்கி இருந்த யானை, அவரை தாக்கியது.

இதில், படுகாயமடைந்த அவரை, ஊர் மக்கள் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், லீனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடரும், யானை தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்தக் கோரி, மருத்துவமனையை, இப்பகுதியினர் முற்றுகையிட்டனர். அவர்களை வனச்சரகர் ராஜேந்திரன், அமைதிப்படுத்தினார்.

மேலும் வனத்துறை சார்பில், பெண்ணின் கணவர் ஜோசப்பிடம், முதற்கட்டமாக, ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 17 December 2025: நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்
100 நாள் வேலை திட்டத்தை மொத்தமாக ஒழித்துக்கட்ட துடிக்கும் மோடி அரசு.. திருமா கொந்தளிப்பு