தமிழர்கள் குறித்து சர்ச்சை கருத்து; பாஜக அமைச்சர் ஷோபா மீதான விசாரணைக்கு தடை!

Published : Mar 22, 2024, 07:24 PM IST
தமிழர்கள் குறித்து சர்ச்சை கருத்து; பாஜக அமைச்சர் ஷோபா மீதான விசாரணைக்கு தடை!

சுருக்கம்

தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மத்திய அமைச்சர் ஷோபா மீதான வழக்கு விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 'ராமேஸ்வரம் கஃபே' உணவகத்தில் கடந்த 1ஆம் தேதி பிற்பகலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.  இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் ப‌டுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டு, அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இதனிடையே, பெங்களூரு ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி பேசிய பாஜக மத்திய அமைச்சர் ஷோபா, ‘தமிழ்நாட்டில் இருந்து வந்து சிலர் எங்கள் கஃபேவில் வெடிகுண்டு வைத்து விட்டு சென்று விட்டனர்.’ என போகிற போக்கில் ஆதாரமின்றி தமிழ்நாடு மீது அவதூறு பரப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2024: திருப்பூர் தொகுதி - கள நிலவரம் என்ன?

அவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் பாஜக மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ஷோபா மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய புகாரில் பெங்களூரு காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் வழக்கின் விசாரணைக்கு தடை கோரி அவர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஷோபா முறையீடு செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மத்திய அமைச்சர் ஷோபா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தி பேசிய மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. அந்த புகாரில் நடவடிக்கை எடுக்க, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!