
பள்ளிக்கல்வித் துறைக்கு புதிய இயக்குனராக நியமனம் கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக இருந்த அறிவொளி இன்று ஓய்வு பெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பன் பள்ளிக்கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசுத் தேர்வுகள் இயக்குநாராக இருந்த சேதுராம வர்மா புதிய தொடக்கக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனர் லலிதாவுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆசையாக ரெண்டு நாவல் பழத்தை எடுத்துத் தின்ற சிறுவன்... ஈவு இரக்கம் இல்லாமல் அடித்துக் கொன்ற மாமன்!
இது குறித்த அரசாணையை பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளார். இந்த பணி மாறுதல் ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- I ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, இந்த பணியிட மாறுதல் மற்றும் முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணையில் கூறப்பட்டுள்ளது.
இனி மொபைல் நெட்வொர்க்கை மாற்றுவது அவ்ளோ ஈசி இல்ல... ஆன்லைன் மோசடிக்கு செக் வைக்கும் டிராய்!