நுரையீரல் தொற்று பாதிப்புடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உயிரிழந்தார்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் தொற்று பாதிப்புடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உயிரிழந்தார். இதையடுத்து சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல் காமாட்சிபுரி ஆதினத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இதையும் படிங்க: தனியார் பேருந்து மீது உரசிய கன்டெய்னர் லாரி.! படிக்கட்டில் பயணித்த 4 கல்லூரி மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் பலி.!
அண்மையில் டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சென்று பிரதமரிடம் செங்கோல் வழங்கியவர்களில் காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகளும் ஒருவர். அேதபோல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தங்க கவசம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முதலில் ஜெயலலிதாவிடம் முன்வைத்தவர் கோவை காமாட்சிபுரி ஆதீனம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: வணக்கத்திற்குரிய கோவை காமாட்சிபுரி ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அவர்கள், இறைவன் திருவடிகள் அடைந்தார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
வணக்கத்திற்குரிய கோவை காமாட்சிபுரி ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அவர்கள், இறைவன் திருவடிகள் அடைந்தார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில், துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க… pic.twitter.com/ii3iKYgtpv
பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில், துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தியவர். புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்புவிழாவில் பங்கு கொண்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு செங்கோல் வழங்கி ஆசி வழங்கியவர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற போகும் கட்சிகள் இவை தான்.! பாமக நிலைபாடு என்ன தெரியுமா?
ஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகளைப் பிரிந்து வாடும் பக்தர்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.