
கமல், ஜெ.தீபா, பிக்பாஸ் ஜூலி மூவரும் வெவ்வேறு கருத்துகளை ஒரே விதத்தில் தெரிவித்துள்ளனர்.
”மக்கள் விரும்பினால்” என்ற வாக்கியம் தான் கமல், தீபா, ஜூலி ஆகிய மூவரையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கிறது.
கமல்: மக்கள் விரும்பினால் முதல்வராவேன்
தீபா: மக்கள் விரும்பினால் முதல்வர் பழனிசாமியுடன் இணைந்து செயல்படுவேன்.
ஜூலி: மக்கள் ஏற்றுக்கொண்டால் மீண்டும் ஜல்லிக்கட்டு ஜூலியாக போராடுவேன்.
கமல் கூறிய மக்கள் விரும்பினால் என்ற வாக்கியத்தை தீபாவும் ஜூலியும் வெவ்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தி நெட்டிசன்கள் மத்தியில் வறுபடுகின்றனர்.
மக்கள் விரும்பினால், மக்கள் ஏற்றுக்கொண்டால் என்ற வாக்கியங்களை சொல்லியே தங்களை பெரிய ஆட்களாக காட்டிக்கொள்ள தீபாவும் ஜூலியும் முயற்சிக்கிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. நாங்க(மக்கள்) உங்களலாம் விரும்பல.. நீங்க போய் உங்க வேலையை பாருங்க என தீபாவையும் ஜூலியையும் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.