“அரசியலில் கமல் ஜெயிக்க முடியாது”–அடித்து கூறுகிறார் சகோதரர் சாருஹாசன்..!

 
Published : Oct 07, 2017, 05:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
“அரசியலில் கமல் ஜெயிக்க முடியாது”–அடித்து கூறுகிறார் சகோதரர் சாருஹாசன்..!

சுருக்கம்

kamal wont win tn politics said his brother saruhasan

“அரசியலில் கமல் ஜெயிக்க முடியாது”–அடித்து கூறுகிறார் சகோதரர் சாருஹாசன்..!

நடிகர் கமல் அரசியலுக்கு வர உள்ளதால் தமிழகத்தில் மேலும் ஒரு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வரும் நவம்பர் 7 ஆம் தேதி நடிகர் கமல் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில், கமல் தொடங்க உள்ள புதுகட்சி குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிகிறது

கமல் அரசியலுக்கு வருவதற்கு, பெரும்பாலோனோர் அதரவு தெரிவித்து வந்தாலும்,மறுபக்கம் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. குறிப்பாக அரசியல்வாதிகள் கமலுக்கு எதிராகத்தான் பல கருத்துகளை கூறி வருகின்றனர்.

இதெல்லாம் சரி,கமலின் உடன் பிறந்த சகோதரர் சாருஹாசன் கமல் அரசியலுக்கு வருவதை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?

தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுக என்ற இரண்டு கட்சிகள் மட்டுமே மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது. இதற்கிடையில் மாற்று சக்தியாக கமல் அரசியலுக்கு வருவதால், மூன்றாவது கட்சி உருவாக  வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்

மேலும்,கமல் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக ஜெயிக்க முடியாது என அடித்து கூறுகிறார்

மேலும், ரஜினியாகட்டும் கமலாகட்டும் நடிகன் என்ற தகுதி மட்டும் அரசியலுக்கு போதாது....அதையும் தாண்டி அதற்கென தனி ஒரு பக்குவம்  வேண்டும் என தெரிவித்துள்ளார்

அதற்காக ஜெயலலிதா முதல்வராக இருந்தாரே..அவரும் ஒரு நடிகர் தானே.. என கேட்டால், அவர் நடிகை என்பதற்காக மட்டும் அரசியலுக்கு வரவில்லை..அதையும் தாண்டி அவருக்கென சில அங்கீகாராம் உள்ளது  என தெரிவித்துள்ளார் கமலின் சகோதரர் சாரு ஹாசன்

தனியார் தொலைக்காட்சிக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் சாருஹாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

சொந்த சகோதரரே, கமல் குறித்து இது போன்ற கருத்தை தெரிவித்து  உள்ளது அனைவரையும் சற்று சிந்திக்க வைத்துள்ளது  

 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!