
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது .
எந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டாரோ கமல் தெரியல....பிக்பாஸ் நிகழ்ச்சியும் வெற்றி பெற்றது. அவருடைய அரசியல் வாழ்க்கைக்கும்வழி வகுத்துள்ளது.
நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் கமலின் வித்தியாசமான கேள்விகளும், அதனை முறைப்படுத்தி மக்களுக்கு விளக்கம் கொடுக்கும் விதமும் மிகவும் அருமையாக இருந்தது.
கமல் தொகுத்து வழங்கிய இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த, பிக்பாஸ் சீசன் 2 விரைவில் தொடங்க உள்ளது.
அதில் தொகுப்பாளராக நடிகர் சூர்யா வர உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சூர்யா இல்லையாம்....பெண்களின் மனதை தன் கட்டுக்குள் வைத்திருந்த கனவு கண்ணன், இப்ப இல்லைங்க....முன்பொரு காலத்தில்....நடிகர் அரவிந்த்சாமி தான் அடுத்த சீசன்2 தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பிக்பாஸ் சீசன்2 வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாம்