கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிரடி திருப்பம் !

By Raghupati RFirst Published Aug 22, 2022, 10:06 PM IST
Highlights

ஸ்ரீமதியின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி கடந்த 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது. பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவுகள்- பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, 4 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகளுக்கு..தமிழகத்தில் விரைவில் உயரும் மின் கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி - எவ்வளவு தெரியுமா ?

பின்னர், அதற்கு மறுநாளான ஜூலை 17ம் தேதி, பெரும் போராட்டமாக உருவெடுத்து, பள்ளிகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், பள்ளிகளில் பெரும்பாலான பொருட்கள் சூறையாடப்பட்டது.  மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

ஸ்ரீமதியின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதியின் உடற்கூராய்வு ஆய்வறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவக்குழு தாக்கல் செய்தது. ஶ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கையையும் கடந்த 1ம் தேதி ஜிப்மர் மருத்துவக்குழுவுக்கு அளிக்கப்பட்டது. 

மேலும் செய்திகளுக்கு..தேதி குறித்த ஸ்டாலின்.. திடீர் ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.! கொங்கு மண்டலத்தில் திமுக Vs அதிமுக மோதல்

இந்நிலையில் அதனை ஆய்வு செய்து நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பரானியிடம் அறிக்கையாக தாக்கல் செய்தது ஜிப்மர் மருத்துவ குழு. அதுமட்டுமின்றி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதி உடன் படித்த 2 மாணவிகள் சுமார் 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளனர். மாணவிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளின் வாக்குமூலம் வழக்கின் முக்கிய திருப்பமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகளுக்கு..11 நாட்கள் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!