எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இதுக்குறித்து மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு தலையிட்ட போதும் இலங்கை கடற்படை இத்தகைய அத்துமீறல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் விரைவில் உயரும் மின் கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி - எவ்வளவு தெரியுமா ?
இன்று காலை நாகை மாவட்டம் அக்கரைப்பட்டியிலிருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேரை கைது செய்தும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தும் திரிகோணமலை கப்பற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: கடன் வாங்கி மகன் கேட்டதை செய்த தாய்… பெருமையை தேடி தந்த விக்னேஷ்... யார் இவர்?
மேலும் நாகை மீனவர்கள் 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், கடந்த 6 ஆம் தேதி கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் நாகை துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 9 பேரையும் கைது செய்து, அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.