மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ஆம் தேதி அன்று உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் சக்தி மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் மேல் தளத்திலேயே விடுதியும் இயங்கி வருகிறது. இங்கு விடுதியில் தங்கி பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13ஆம் தேதி அன்று தரை தளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பள்ளியை முற்றையிட்டு பெற்றோர், கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..நாம ஜெயிச்சிட்டோம்.. குஷியில் ஓபிஎஸ்” ஆடிப்போன எடப்பாடி.. அதிமுக அதோகதியா?
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் உள்ள மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்ட அவர், 'கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரிலுள்ள தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதிவிசாரணைக்கோரும் பெற்றோர்களை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து, ஆறுதல்கூறி, அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர துணைநிற்போம் என்று உறுதியளித்தேன்.
ஆற்றமுடியாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் மாணவியின் பெற்றோருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன். மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை செய்து, பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..அடுத்த ஆளுநர் ரஜினிகாந்த்.. பாஜக போட்ட ஸ்கெட்ச் - இதுதான் ரஜினி முடிவா ?