Latest Videos

சொன்னதை செய்து காட்டிய பாஜக! கள்ளச்சாராயம் குடித்து பலியான குடும்பத்திற்கு ஒரு லட்சம் வழங்கிய எஸ்.ஜி.சூர்யா!

By vinoth kumarFirst Published Jun 22, 2024, 3:41 PM IST
Highlights

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு  தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார். 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாஜக சார்பில் நிவாரணம் வழங்கிய பின்னர், திமுக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டார். 

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை 150க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்துள்ளனர். இதில், குடித்தவர்கள் அனைவருக்கும் வாந்தி  கண் எரிச்சல் தலை சுற்றல் ஏற்பட்டதை அடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம், சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: Annamalai: தமிழகத்தில் கள்ளு கடைகளை கொண்டு வரும் நேரம் இது - அண்ணாமலை கருத்து

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த், அண்ணாமலை உள்ளிட்ட பலர கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சி விரைந்தனர். அங்கு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.  

அப்போது பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு  தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு மத்திய அரசு திட்டங்கள் விரைவாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அண்ணாமலை உறுதி அளித்திருந்தார். அதன்படி அண்ணாமலையின் உத்தரவின் பேரில் பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் கட்சி நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விரைந்து கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 

இதையும் படிங்க:  கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்ட விஷ சாராயம் விழுப்புரம் பஸ்டாண்டில்? குடித்தவருக்கு பறிபோன கண் பார்வை? ராமதாஸ்!

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 29 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக பாஜக சார்பாக அதன் மாநில செயலாளர் தலா ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.இதையடுத்து, கள்ளச்சாராய விற்பனையத் தடுக்கத் தவறியதாகவும், 50க்கும் மேற்பட்டோர் மரணத்திற்கு காரணமானதாகவும் திமுக அரசு மீது குற்றச்சாட்டி கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிவிட்டு, ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய திமுக அரசைக் கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, திறனற்ற திமுக அரசின் காவல்துறையினர் எங்களை கைது செய்தனர்.

Protested in front of the Kallakurichi… pic.twitter.com/UczE6pUcyh

— Dr.SG Suryah (@SuryahSG)

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட அனைத்து பாஜகவினரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

click me!