கண்ணொளித் திட்டம் முதல் காப்பீட்டுத் திட்டம் வரை: கலைஞர் ஆட்சியில் கொண்டுவந்த மருத்துவத் திட்டங்கள்!

By SG Balan  |  First Published Jun 3, 2024, 9:47 AM IST

கலைஞர் கருணாநிதி தனது ஆட்சியில் மக்களின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக மருத்துவத் துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார். இத்தொகுப்பில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மருத்துவத் திட்டங்கள் பற்றிப் பார்க்கலாம்.


முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 101வது பிறந்நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறது. கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை பதினைந்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது.

கலைஞர் கருணாநிதி தனது ஆட்சியில் மக்களின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக மருத்துவத் துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார். இத்தொகுப்பில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மருத்துவத் திட்டங்கள் பற்றிப் பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

undefined

நீங்கள் கனவு கண்ட கம்பீரத் தமிழ்நாட்டை நாங்கள் உருவாக்கிக் காட்டிவருகிறோம்.. முதல்வர் ஸ்டாலின்!

கலைஞர் கண்ணொளி திட்டம்

கலைஞர் ஆட்சியில் தமிழ்நாட்டில் 10,784 மருத்துவமனைகளை உருவாகியுள்ளன. பத்து நடமாடும் மருத்துவமனைகளையும் தொடங்கி, சென்னையை இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக செயல்பட வைத்தார். எய்ட்ஸ், போலியோ ஒழிப்பில் தமிழ்நாடு சாதனை படைக்க கலைஞரின் திட்டங்கள் முக்கியக் காரணமாக அமைந்தன.

1971 முதல் 1976 வரை தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கண்ணொளித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கண் பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு கண் பரிசோதனை நடத்தப்பட்டு இலவச கண்ணாடிகள் கொடுக்கப்பட்டன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பலன் அடைந்தனர்.

1990ஆம் ஆண்டில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் வகையிலும் ஒரு திட்டத்தையும் கொண்டுவந்தார். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை மணந்தால் ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். பின்னர், இந்தத் திட்டத்தை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தினார். இரண்டு மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்துகொண்டாலும் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு:

கலைஞர் ஆட்சியில் 25.76 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுமார் 1,389 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ரூ.6,000 நிதியுதவி பெற்றனர். கர்ப்ப காலத்தில் சிறந்த சுகாதாரம் உறுதி செய்யப்பட்டு, தாய் சேய் நலன் பேணப்பட்டது.

இதனால், மருத்துவம் மற்றும் மகப்பேறு துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்கியது. 1,421 ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு சுகாதார மையத்திலும் 3 செவிலியர்கள் 24 மணிநேரமும் பணி அமர்த்தப்பட்டனர். 2005-2006ஆம் ஆண்டில் இந்த சுகாதார மையங்களில் 82,532 பிரசவங்கள் நடந்தன. இது, 2009-2010ஆம் ஆண்டில் 2,98,853 ஆக அதிகரித்தது.

குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை நிதியுதவி:

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்ய ரூ.20,000 முதல் ரூ.50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. கடினமான அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. 28 தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து 3,264 சிறார்களுக்கு ரூ.17.10 கோடி மதிப்பிலான இதய அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன.

வருமுன் காப்போம் திட்டம் மூலம் கிராமப்புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டன. அங்கு வசிக்கும் மக்களுக்கு மருத்துவ சேவைகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. நகர்ப்புறத்திற்கும் கிராமப்புறத்திற்கும் உள்ள சுகாதார இடைவெளியைக் குறைப்பதன் மூலம் மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்தார்.

அவசர மருத்துவ வசதிக்காக 108 ஆம்புலென்ஸ் சேவை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி. 445 அதிநவீன வாகனங்களுடன் பயிற்சி பெற்ற மருத்துவர்களை நியமித்து உடனடி மருத்துவ உதவிக்கு வழிவகுத்தார். அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆகும் நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. இதனால் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

வீட்டில் 24 மணிநேரமும் ஏசி ஓடுதா? உங்களுக்கு வல்லுநர்கள் கொடுக்கும் அட்வைஸ் இதுதான்!

கலைஞர் காப்பீடுத் திட்டம்:

உயிர் காக்கும் மேம்பட்ட சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முன்னோடி திட்டம் ஆகும். இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 3 லட்சம் பேருக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சைக்கு விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கலைஞரின் ‘ஆரோக்கிய தமிழ்நாடு திட்டம்’ செயல்படுத்தப்பட்டது. நோய்களை வரும்முன் காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் முதல் முறையாக நாய்க்கு இதய அறுவைசிகிச்சை! டெல்லி கால்நடை மருத்துவமனை சாதனை!

click me!