இது பெரியாருக்கு கிடைத்த விருது; பரிசுத் தொகை நன்கொடை - கி.வீரமணி அறிவிப்பு!

Published : Aug 15, 2023, 11:13 AM IST
இது பெரியாருக்கு கிடைத்த விருது; பரிசுத் தொகை நன்கொடை - கி.வீரமணி அறிவிப்பு!

சுருக்கம்

தந்தை பெரியாருக்கு கொடுக்கப்பட்ட விருது இது என தகைசால் தமிழர் விருது பெற்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டார்.

அதன்படி, சென்னையில் இன்று நடைபெற்ற 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, தகைசால் தமிழர் விருதினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை தகைசால் தமிழர் விருது பெற்ற கி.வீரமணிக்கு வழங்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின பேச்சு!

இந்த நிலையில், இது தந்தை பெரியாருக்கு கொடுக்கப்பட்ட விருது என தகைசால் தமிழர் விருது பெற்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது தந்தை பெரியாருக்கு கொடுக்கப்பட்ட விருது. எனக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை, திருச்சியில் அமையவுள்ள சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக வழங்கவுள்ளேன்.” என அறிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி