பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய நிருபர்கள்...! 5 பேருக்கு போலீஸ் வலை...!

 
Published : May 21, 2018, 06:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய நிருபர்கள்...! 5 பேருக்கு போலீஸ் வலை...!

சுருக்கம்

Journalists threaten Anglo Indian woman

ஆங்கிலோ இந்தியன் பெண்ணிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 5 நிருபர்களை கைது செய்ய காவல் துறை உத்தரவிட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆங்கிலோ இந்தியன் பெண்மணி ஒருவர் குரங்கை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண்ணின் வீட்டு வேலைப் பார்ப்பவர் கொடுத்த தகவலை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த நிருபர்கள், அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

கொடைக்கானலைச் சேர்ந்த 3 நிருபர்களும், திண்டுக்கல்லைச் சேர்ந்த 2 நிருபர்களும், அந்த பெண்ணிடம் 10 லட்சம் ரூபாய் வரை கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது, வீட்டு வேலை பார்த்து வந்தவர், சமாதானம் செய்வதுபோல் அந்த பெண்ணிடம் பணத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

அந்த பெண்ணும், தன்னிடம் இருந்த நான்கரை லட்சம் ரூபாயை முதல் கட்டமாக கொடுத்துள்ளார். மீதி பணமான ஐந்தரை லட்சம் ரூபாயைக் கேட்டு மீண்டும் அந்த நிருபர்கள், பெண்ணின் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண், பணம் தர மறுக்கவே அவர்கள், அந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இது குறித்து ஆங்கிலோ இந்தியன் பெண்மணி, தூதரகத்தில் புகார் கொடுத்துள்ளார். தனது வீட்டுக்கு வந்து மிரட்டிய நிருபர்கள் குறித்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஒப்படைத்துள்ளார். அவரது புகாரைப் பெற்றுக் கொண்ட தூதரகம் நடவடிக்கை எடுக்க சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் 5 நிருபர்களை கைது செய்ய காவல் துறை உத்தரவிட்டுள்ளது. நிருபர்கள் பணியாற்றும் ஊடகங்களுக்கும் இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இ

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: தங்கம் மாதிரி ஏறும் முட்டை விலை! இனி ஆம்லேட் கனவுதான்.. விலை எவ்வளவு?
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!