TN 06 DG 2345 - பன்னீர் செல்வத்துக்கு பார்சலான எடப்பாடியார் பரிசு

 
Published : May 21, 2018, 05:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
TN 06 DG 2345 - பன்னீர் செல்வத்துக்கு பார்சலான எடப்பாடியார்  பரிசு

சுருக்கம்

pannerselvam got a new car

ரஜினி நடித்த தர்மயுத்தம் படத்தை  விட மிகவும் பிரபலமானது நம்ம பன்னீர் செல்வம் நடத்திய பன்னீர் செல்வம் தர்மயுத்தம். ஜெயலலிதாவின் இறப்புக்குபின் அவரது சமாதியில் பன்னீர்செல்வம் நடத்திய போராட்டத்திலிருந்து அவருடைய இமேஜ் கொடிகட்டி பறக்கத் தொடங்கியது.

எடப்பாடி அரசுக்கு எதிராக பேசிவந்தவர். ஊழல் மலிந்து உள்ளதாக குற்றம் சாட்டியவர். துணைமுதல்வர் பதவி கிடைத்த்தும் குற்றச்சாட்டுகளை எல்லாம் காற்றோடு பறக்கவிட்டு பதவிக்கு வந்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டவர்.  பதவி கிடைத்ததும் நட்பு பலமானது, கெட்டியாக உள்ளதென ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கத் தொடங்கியுள்ளார்.

தர்மயுத்தம் தொடங்கி முதல்வர் பதவி கேட்டு கிடைக்காமல் துணை முதல்வர் பதவியில் கூடுதல் இலாக்களுடன் அமர்ந்த பன்னீர் செல்வத்துக்கும் உடன் இருந்த பாண்டியராஜனுக்கும் புது இன்னோவா காரினை பரிசாக் பார்சல் செய்துள்ளது எடப்பாடி அரசு.

துணைமுதல்வர் பன்னீர் செல்வம் தான் பயன்படுத்தி வந்த காரினை தளாய் சுந்தரத்துக்கு கொடுத்துவிட்டார்கள்.

பாண்டியராஜன் பயன்படுத்தி வந்த காரை ஆஃபிஸ் வேலைக்காக எடப்பாடியார் எடுத்துக்கொள்ள, இருவருக்கும் புது கார் வாங்கப்பட்டுள்ளது.

பன்னீர் செல்வம் பயன்படுத்திய பழைய காரின் எண் TN 05 G2345 தற்போதைய காரின் எண்     TN06 G 2345 இரண்டுக்கும் ஒரு எண் மட்டுமே வித்தியாசம். காரின் விலை மட்டும் குறிப்பிட்ட நிலையில் பில் தயாரிக்கப்பட்டுள்ளது. வரி கட்டிய எந்தத் தகவலும் இல்லை.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 21 December 2025: கார் விபத்து - நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
டெட் தேர்வில் திருப்பம்! சிறுபான்மை பள்ளிகளுக்கு இனி அந்த கவலை இல்லை.. முதல்வர் போட்ட அதிரடி கையெழுத்து!