ஜெயலலிதாவை மறக்கக்கூடாது.. இது தமிழ்நாடா, இல்லை.? ஒரே போடாக போட்ட அன்புமணி ராமதாஸ்

Published : Oct 26, 2025, 03:51 PM IST
Anbumani Ramadoss

சுருக்கம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது உரிமை மீட்பு பயணத்தின் ஒரு பகுதியாக திருப்பூரில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ராமதாஸ், ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற தலைப்பில் 108 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் திருப்பூரில் அரிசி கடை வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பல முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அடிப்படை வசதியே இல்லை

அவர் பேசியபோது, ​​“திருப்பூரை மாநகரம் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு வழங்கவில்லை. திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற கொங்கு பகுதி மாநில வருவாய்க்கு பெரும் பங்களிப்பு அளிக்கின்றன. ஆனால் இப்பகுதி புறக்கணிக்கப்படுகிறது,” என கடுமையாக குற்றம் சாட்டினார்.

நொய்யல் ஆறு இப்போது சாக்கடையாகி விட்டது

“நொய்யல் ஆறு நோய்களைப் போக்கும் ஆறாக இருந்தது. ஆனால் இன்று அந்த கழிவுகள் நிரம்பிய சாக்கடையாக மாறியுள்ளது. தமிழக அரசு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை,” என அவர் வருத்தம் தெரிவித்தார்.

திமுக தோல்வி

“2021-ல் மாணவர்களில் 9% பேர் போதைப் பழக்கத்தில் இருந்தனர். இன்று அது 15% ஆக உயர்ந்துள்ளது. 25 லட்சம் மாணவர்கள் போதைப் பொருளின் பிடியில் சிக்கியுள்ளனர். இதற்கு காரணம் திமுக ஆட்சி தான்,” என அன்புமணி ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

கனிம வள கொள்ளை

“தென் மாவட்டங்களில் தினசரி 800க்கும் மேற்பட்ட லாரிகள் கனிம வளங்களை கடத்துகின்றன பின்னால் திமுகவின் ஒரு முக்கிய நபர் இருக்கிறார். விரைவில் சிபிஐ விசாரணை நடந்து உண்மை வெளிப்படும்,” என அவர் தெரிவித்தார்.

சாதி அடக்குமுறை

“சாதி அடக்குமுறை நீங்க வேண்டுமானால் பின்தங்கிய சமூகங்களுக்கு கல்வியும் வேலையும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். அதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்,” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

திமுக ஆட்சியில் கடன் மீட்பு

“1947 முதல் 2021 வரை தமிழகத்தின் கடன் ரூ.4.5 லட்சம் கோடி. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அது ரூ.9.5 லட்சம் கோடி. உயர்ந்துள்ளது. இது திமுக நிர்வாகத்தின் திறமையை காட்டுகிறது,” என அவர் கூறினார். மேலும், “சமூகநீதி போராட்டத்தில் ஜெயலலிதா 69% இடஒதுக்கீட்டைப் பெற முடியாத சாதனை” என்றும் பாராட்டினார் அன்புமணி ராமதாஸ்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!