
மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும்,திரையுலகினரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை முதலமைச்சரின் உடல்ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அங்கு வந்த மத்திய அமைச்சர் திரு. வெங்கய்ய நாயுடு, முதலமைச்சரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்,
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் உடல் அருகே அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் அஞ்சலி செலுத்த வருபவர்களை பார்த்து சோகமாக தனது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
திரு.வெங்கய்யா நாயுடுவின் இந்த செயல் அங்கிருப்பவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்ததியது- மத்திய அமைச்சர் ஒருவர் ,தமிழக முதலமைச்சர் மிது வைத்திருந்த அன்பும், மரியாதையும் அனைவரையும் வியக்கவைத்தது.