தமிழர்களின் வாழ்வில் நீங்காத சோகங்கள் தந்த டிசம்பர்

 
Published : Dec 06, 2016, 12:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
தமிழர்களின் வாழ்வில் நீங்காத  சோகங்கள் தந்த டிசம்பர்

சுருக்கம்

தமிழர்களின் வாழ்வில் டிசம்பர் மாதம் நீங்காத துயர வடுக்களை தொடர்ந்து விட்டுச்சென்று கொண்டே இருக்கிறது. தமிழ் மக்களின் இதயத்தை உடைக்கும் பெரும்பாலான நிகழ்வுகள், பேரிழப்புகள் அனைத்தும் டிசம்பர் மாதத்தில்தான் நடந்துள்ளன. 

அந்த பேரிழப்புகளில் ஒன்றுதான் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் ஈடு செய்ய முடியாத மறைவு. 

தமிழகத்துக்கு ஏற்கனவே பல முக்கியத்தலைவர்களின் மறைப்பும், பேரிழப்புகளின் வடுக்கழும் மக்களின் மனதைவிட்டு நீங்கா நிலையில்,இப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு பேரிடியாக இறங்கி இருக்கிறது.

அ.தி.மு.க. கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ராமச்சந்திரன் கடந்த 1987-ம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் 24-ந்தேதி மக்களை விட்டு பிரிந்தார். அதே மாதத்தில் ஜெயலலிதாவும் இறந்துள்ளது கழகத்தின் மீதும், கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் மீதும் ஜெயலலிதாவுக்கு இருக்கும் விசுவாசத்தை காட்டுகிறது. இரு தலைவர்களுமே இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டுதான் இறந்துள்ளனர். 

இது மட்டுமல்ல, இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரான சி. ராஜகோபாலாச்சாரியும் கடந்த 1972-ம்ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி இறந்தார். தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஈ.வெ.ராமசாமி என்ற தந்தை பெரியாரும் இதே டிசம்பர் மாதத்தில் தனது 94-வயது வயதில்  தமிழ்மண்ணைவிட்டு பிரிந்தார். அவர் கடந்த 1972-ம் ஆண்டு டிசம்பர் , 24-ந்தேதி இறந்தார். 

தலைவர்களின் மறைவு மட்டும் மக்களை துயரத்தில் ஆழ்த்தவில்லை, இயற்கையும் தன்னால் இயன்ற அளவுக்கு சோகத்தையும், அச்சத்தையும் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளது. 

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வானத்தை உடைத்துக்கொண்டு கொண்டு கொட்டித்தீர்த்த மழையும் டிசம்பர் மாதத்தில் வந்தது.  இதனால், சென்னை, காஞ்சிரபுரம், கடலூர், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

அதற்கு முன், கடந்த 2004ம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய சுனாமி, இதே போன்ற ஒரு டிசம்பர் மாதத்தில் 26-ந்தேதி வந்து தமிழர்களை காவு வாங்கியது. அந்த ஆழிப்பேரலையில் தமிழக மக்கள் உயிர், உறவுகள், உடமைகளை இழந்து தவித்தனர். 

அப்போது தமிழகத்துக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா பக்கபலமாக இருந்து தமிழர்களை துணை இருந்தார். ஆழிப்பேரலையால் வீடு, பொருள் என அனைத்தையும், இழந்தவர்களுக்கு சோகம் தெரியாத வகையில், இழந்த அனைத்தையும் அரசு சார்பில் வழங்கி, அவரின் துயரம் துடைத்தார்.

 

ஆனால், இன்று, தங்களின் துயர் துடைத்த தலைவியான, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இழந்து கண்ணீருடன் தமிழ் மக்கள் கதறுகிறார்கள். இந்த இழப்பை யார் ஈடு செய்வார்கள்… டிசம்பர் மாதம் தமிழர்களுக்கு இப்படியா மறக்க மடியாத சோகத்தை மீண்டும், மீண்டும் தருகிறதே ?.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 17 December 2025: நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்
100 நாள் வேலை திட்டத்தை மொத்தமாக ஒழித்துக்கட்ட துடிக்கும் மோடி அரசு.. திருமா கொந்தளிப்பு