
முதலமைச்சர் செல்வி செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள் என அனைத்தும் முடப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் நேற்று முதலே இயங்வில்லை.
சாலைப் போக்குவரத்தும் முடங்கியுள்ளன. இதேபோல் பெரும்பாலான ஆட்டோக்கள் இயங்கவில்லை.
தமிழக அரசு இன்று ஒரு நாள் அலுவலங்களுக்கும், முன்று நாட்கள் பள்ளி,கல்லுரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.
இதனிடையே இன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
இதனால் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.