முதல்வர் உடல்நிலை பாதிப்பு - ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரடைப்பால் மரணம்

First Published Dec 5, 2016, 11:37 AM IST
Highlights


முதலமைச்சருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அறிந்த்தும், பண்ருட்டி அருகே ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

சென்னை அப்பல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சன்னியாசிப்பேட்டை சேர்ந்தவர் நீலகண்டன் (40). ஜெயலலிதா பேரவை செயலாளர். இவரது மனைவி ஷகிலா (38). இவாக்ளுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

நேற்று மாலை முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்த செய்தியை தொலைகாட்சியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிமுகவினர் இடயே பெரும் அதிர்ச்சியையும், கவலையை ஏற்படுத்தியுள்ளது.

click me!