
முதல்வர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நேற்று கவர்னர் நேரில்வந்து பார்த்து முதல்வர் உடல் நிலையை கேட்டறிந்து உள்துறை அமைச்சருக்கு அறிக்கை அளித்தார்.
மத்திய சுகாதார அமைச்சர் நட்டா தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளதாக் கூறினார். முதல்வர் உடல் நலம் குறித்து கேட்டறிந்த அவர் இது குறித்து பிரதமரிடம் நேரில் விளக்கியுள்ளார்.
இது தவிர சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் 4 பேர் கொண்ட குழுவை அனுப்பி உள்ளார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் அன்புக்குரிய நண்பர் வெங்கய்யா நாயுடு முதல்வர் உடல் நிலை குறித்து ஆளுநரிடம் விசாரித்தார். தலைமை செயலாளரிடமும் விபரங்களை கேட்டறிந்தார்.
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வருவார் ,அவருக்கு இறைவன் துணை இருப்பார் என்று பேட்டி அளித்தார். இந்நிலையில் முதல்வரை காண மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அப்போலோவுக்கு நேரில் வர உள்ளார்.
அவரை அப்போலோவுக்கு சென்று தம் சார்பில் பார்த்து விசாரிக்கும் படி பிரதமர் கேட்டுகொண்டதாக கூறப்படுகிறது. இன்று மதியத்துக்கு மேல் சென்னை வரும் வெங்கய்யா நாயுடு அப்போலோ மருத்துவமனைக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.