
நாளை தொடங்கவுள்ள தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் GST மசோதா நிறைவேற்றப்படும் என்றும், இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் விலைவாசி குறையும் என்றும் தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் மின்னணு சாதனங்கள் வரிவிதிப்பு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்த கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், GST வரி விதிப்பு தொடர்பாக டெல்லியில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடைபெறும் என்றும், வரி விதிப்பில் குறைகள் இருந்தால் அவற்றை சரி செய்து கொள்ளலாம் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.
நாளை தொடங்கவுள்ள தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் GST மசோதா நிறைவேற்றப்படும் என்றும், இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் விலைவாசி குறையும் என்றும் அவர் கூறினார்.
GST அமல்படுத்தப்பட்டால் வணிகர்கள், உற்பத்தியாளர்கள் , விநியோகஸ்தர்கள் என அனைத்து தரப்பினரின் நலனும் பாதுகாக்கப்படும் என ஜெயகுமார் தெரிவித்தார்.
பெட்ரோல் வரிவிதிப்பு மாநில அரசுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தான் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டார்.
ஹோட்டல் உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டிருப்பதாகவும், சினிமா கட்டணத்தை 18 சதவீதமாக குறைப்பது குறித்தும் பரிசீலப்பதாகவும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.