நடுரோட்டில் முதியவரை தீ வைத்து எரித்த கொடூர வாலிபர்கள் - மரித்து போன மனிதநேயம்...

 
Published : Jun 13, 2017, 11:36 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
நடுரோட்டில் முதியவரை தீ வைத்து எரித்த கொடூர வாலிபர்கள் - மரித்து போன மனிதநேயம்...

சுருக்கம்

boys firing an oldman on chennai road

சென்னை கோடம்பாக்கத்தில், சாலையின் ஓரமாக படுத்து  தூங்கிய முதியவர் ஒருவரை எரித்துக் கொலை செய்ய முயன்ற 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சாலையில் சில நாட்களுக்கு முன்பு காலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஜப்பார் என்னும் முதியவரை சிலர் தீ வைத்து எரிக்க முயன்றனர். 

அந்த காட்சியை செல்போன் மூலம் பதிவு செய்த அவர்கள் அதை சமூக வலைதளங்களில்  பதிவேற்றினர்.
முதியவர் மீது  எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், சிரித்துக் கொண்டே ஜாலியாக  தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற அந்த காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வீடியோ காட்சி அடிப்படையில் கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில், காமராஜர் காலனியைச் சேர்ந்த ஷியாம், டெம்போ டிரைவர் புகழேந்தி, மற்றும் இரண்டு சிறுவர்கள்  ஆகியோர் முதியவர் மீதுத தீ வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷியாம் என்பவரின் தாயாரை குடிபோதையில் ஜப்பார் திட்டியதாகவும் அதனால், ஆத்திரமடைந்து நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!