“சைபர் கிரைம்” - எந்த வழக்குக்கு எந்த தண்டனை தெரியுமா?

Asianet News Tamil  
Published : Jun 13, 2017, 10:25 AM ISTUpdated : Sep 19, 2018, 12:44 AM IST
“சைபர் கிரைம்” - எந்த வழக்குக்கு எந்த தண்டனை தெரியுமா?

சுருக்கம்

cyber crime details and punishments

பெருகி  வரும் குற்றச்செயல்கள்  பெரும்பாலானவை  சைபர்  கிரைம் குற்றமாகவே  தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் சீட்டிங் தொடங்கி, பெண்களுக்கு கொடுக்கப்படும் பல  தொந்தரவுகள் சைபர்  கிரைமில் வருகிறது.

இதில் எந்தெந்த  குற்றத்திற்கு, எந்த வழக்கு போடப்படுகிறது ? எந்த வழக்கின் கீழ்  குற்றச்செயல்கள்  பதிய  படுகிறதோ, அவர்களுக்கு  எந்த  மாதிரியான  தண்டனை  வழங்கப்படும் என்பதை  பார்க்கலாம்.

சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பதிவு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும்?

ஜ.டி. சட்டம் 2008ன் படி - மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைவாசம் அதே போல் மேலும், ஒரு லட்சம் முதல் ஜந்து லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.

கீழ்கண்ட செக்ஷன்களில் கைதானால் – பெரும்பாலும் பெயில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது 

பிரிவு - குற்றம்

66 - ஹேக்கிங்

66A - ஆபசமாக மெஸேஜ் அனுப்புவது

66B - கம்ப்யூட்டர்,   இன்டர்நெட் வழியாக திருடப்படுவது 

66C - அடுத்தவர்களின் டிஜிட்டன் சைன், பாஸ்வேர்டுகளை திருடுவது

66D - போலி ஜடி உருவாக்கி, தன்னை வேறு ஒருவர் போல் காட்டி

மிரட்டுவது, மோசடி செய்வது.

66E - ஆண், பெண் இருவரின் உடல் பாகங்களை சட்டவிரோதமான

முறையில் வெளியிடுவது

66F - சைபர் டெர்ரஸிஸம், இந்திய இறையாண்மைக்கு எதிரான்

செயல்களில் ஈடுபடுவது

67 - ஆபாச போட்டோ வெளியிடுவது

67A - ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல்

67B - குழைந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுவது

இது  தவிர்த்து , மான நஷ்ட ஈடு வழக்கும், அனுப்பும் மெஸேஜில் மிரட்டல் இருந்தால், கொலைமிரட்டல் வழக்கும் தனியாக தொடுக்க  முடியும்  என்பது   குறிப்பிடத்தக்கது

PREV
click me!

Recommended Stories

அனல் பறந்த 2026 சட்டமன்றம் | முதலமைச்சர் விஜய்-ன் அறிவிப்புகளை ஆதாரங்களுடன் துவம்சம் செய்த உதயநிதி !
Ration Card: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்: இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்.. ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்!