வக்ப் வாரியத்தை முடக்க சட்ட திருத்தம்.! பாஜகவை ஆதரிக்கும் நிதிஷ், சந்திரபாபு நாயுடு எதிர்க்கனும்- ஜவாஹிருல்லா

By Ajmal Khan  |  First Published Aug 6, 2024, 12:11 PM IST

 வக்ப் வாரியங்களின் செயல்பாடுகளை முடக்கி வக்ப் சொத்துகளைத் தன்வயப்படுத்தும் தீய நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு சட்டத் திருத்தங்கள் கொண்டு வரவுள்ளாதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 
 


வக்ப் வாரியத்திற்கு எதிராக சட்ட திருத்தம்

வக்ப் வாரிய சொத்துக்களை தன்வயப்படுத்தும் வகையில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லிம் தனவந்தர்கள் சமூக நலனுக்காக அர்ப்பணித்துள்ள சொத்துகளே வக்ப் சொத்துகள் என அழைக்கப்படுகின்றன. வக்ப் சொத்துகளைக் கண்காணித்து மேலாண்மை செய்வதற்காக மத்திய வக்ப் வாரியமும் மாநில வக்ப் வாரியங்களும் உருவாக்கப்பட்டன.

Tap to resize

Latest Videos

தற்போது வக்ப் வாரியச் சட்டத்தில் 40 வகையான திருத்தங்களை மோடி அரசு மேற்கொள்ளவிருப்பதாகச் செய்திகள் இப்போது ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன. வக்ப் வாரியங்களின் செயல்பாடுகளை முடக்கி வக்ப் சொத்துகளைத் தன்வயப்படுத்தும் தீய நோக்கத்துடன் இச்சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

சி.வி.சண்முகத்தின் பேச்சு ஏத்துக்கவே முடியாது! நீதிபதி கேட்ட ஒற்றை கேள்வி! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

வக்பு வாரிய சொத்துக்கள் கண்டறியப்படுவது எப்படி.?

வக்பு வாரியம் எந்த ஒரு சொத்தையும் தனது சொத்து என்று அறிவிக்கலாம் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது. ஒரு மாநிலத்தில் உள்ள  வக்பு சொத்துகளை நில ஆய்வு செய்து அடையாளம் காணும் பொறுப்பு மாநில அரசின் வருவாய்த் துறைக்கே இருக்கின்றது. வக்ப் வாரியத்தின் தலைமை செயல் அலுவலராக செயல்படுபவர் மாநில அரசின் நியமிக்கப்படும் அரசு அலுவலர் தான்.வக்ப் வாரியத்தில் பெண்கள் உறுப்பினர்களாகவும் வாரியத்தின் தலைவர்களாகவும் செயல்பட்டு வருகிறார்கள். 

மோடி அரசு ஏற்கனவே மிகவும்  சிறுபான்மையினரான ஆங்கிலோ இந்தியர்களுக்கு இருந்த உரிமைகளைப் பறித்தது. தற்போது ரயில்வே இராணுவத்திற்கு அடுத்த அதிகமாக நிலப்பரப்புள்ள சொத்துகளைப் பறிக்கும் நோக்கத்தில் இந்தத் திருத்தங்களைக் கொண்டு வர முயல்கின்றது. இந்த நிலையில் மராட்டியம் ஹரியானா  மற்றும் ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள சூழலில்  முஸ்லிம் வெறுப்பை மூலதனமாக்க வக்ப் சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன

அறிமுக நிலையிலேயே எதிர்க்கனும்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இத்திருத்தங்களை முன்மொழியும் மசோதா தாக்கல் செய்யப்படும் போது இந்தியா கூட்டணிக் கட்சிகள் அறிமுக நிலையிலேயே எதிர்த்து இத்திருத்தங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சியின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும்  ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமாரும் இந்தத் திருத்தங்களை எதிர்க்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

Coimbatore Mayor: சிறையில் இருந்தே ஸ்கெட்ச் போட்ட செந்தில் பாலாஜி.! போட்டியின்றி கோவை மேயராக தேர்வான ரங்கநாயகி


 

click me!