தங்கத்தின் விலையில் மல்லிகைப்பூ..!! கிலோ 3500 ரூபாய்க்கு விற்பனை..

By Thanalakshmi VFirst Published Jan 13, 2022, 2:52 PM IST
Highlights

பொங்கலை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 1 கிலோ மல்லிகை பூ ரூ. 3500-க்கு விற்பனையாகிறது.
 

தைமாதத்தின் முதல்நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். புது பானையில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படைத்து இயற்கைக்கும் உழவர்களுக்கும் நன்றி சொல்லும் நாளாக விதமாக பொங்கல் திருநாள் தமிழர்களால் கொண்டாப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் ஒரு பழமொழியே உண்டு. தமிழர்களின் வாழ்வியலில் தைப்பொங்கல் முக்கியமான திருவிழாவாக சங்ககாலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தைமாதம் முதல் நாளான நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால் புதுபானை, கரும்பு, பூஜை பொருடகள் வாங்க மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. தென் மாவட்டங்களின் பிரதான மலர் சந்தையாக விளங்கும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பொங்கலை முன்னிட்டு மல்லிகை பூ உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

நேற்று வரை கிலோ 2000 முதல் 2500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ விலை இன்று ஓரே நாளில் 1000 ரூபாய் விலை உயர்ந்து 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மல்லிகை வரத்து குறைவாலும் பண்டிகை காலம் என்பதாலும் விலை அதிகரித்துள்ளது. அதேபோல் கனகாம்பரம் 1300 ரூபாய்க்கும், பிச்சிப் பூ 2000 ரூபாய்க்கும், முல்லைப்பூ 2000 ரூபாய்க்கும் மெட்ராஸ் மல்லி 2000 ரூபாய்க்கும், அரளி கிலோ 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்து மூன்று நாட்களும் பண்டிகை என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைவாக இருப்பதால் விலையேற்றம் கண்டுள்ளது. ஆனாலும், மொத்த வியாபாரிகளும் பொதுமக்களும் பூக்கள் வாங்க குவிந்துள்ளனர்.

click me!