விநாயகர் சதுர்த்தி தொடர்ந்து அடுத்தடுத்து முகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகை வரவுள்ளதால பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனிடையே தொடர்மழை காரணமாகவும் முக்கிய சந்தைகளில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் ஆவியூர், வளையங்குளம், உசிலம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மல்லிகை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை காரணமாக, பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. இதனிடையே தொடர்ந்து முகூர்த்த நாட்கள் மற்றும் ஓணம் பண்டிகை வரவுள்ளதால்,பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க:அதிர்ச்சி!! குற்றாலத்தில் கடன் பிரச்சனை காரணமாக தந்தையும் மகளும் தற்கொலை.. தாய் கவலைக்கிடம்..
தற்சமயம் ஏற்பட்டுள்ள வரத்து குறைவு காரணமாக, பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மல்லிகை கிலோ 1200க்கு விற்பனையான நிலையில் தற்போது கிலோவிற்கு ரூ.2,300 முதல் 2,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. முல்லை பூ கிலோவிற்கு ரூ.800 க்கும் பிச்சி பூ கிலோ ரூ.700 க்கும் சம்பங்கி கிலோ ரூ.250 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் பூக்களின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.