ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

By Raghupati RFirst Published Dec 13, 2022, 5:51 PM IST
Highlights

ஜனவரி 4 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கோவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர்  விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க..அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி.. எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு - பங்கேற்பாரா ? வெளியே கசிந்த தகவல் !

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இன மக்களின் குலதெய்வம் ஹெத்தையம்மன் ஆகும். குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவை தலைமையிடமாக கொண்டு ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை அடக்கிய ஆரூர் சார்பில் ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இதையும் படிங்க..2023ம் ஆண்டு திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடக்கும்.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ் !

ஹெத்தையம்மன் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி ஜனவரி 4 ஆம் தேதி அன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 4 விடுமுறையை ஈடுகட்ட ஜனவரி 21 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.. 2023ல் பெரும் போர் மட்டுமா! இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கு, உஷார் !! நாஸ்டர்டாமஸ் சொன்ன கணிப்பு !

click me!