ஜனவரி 7...! ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக்..! நீங்க ரெடியா..?

 
Published : Dec 15, 2017, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
ஜனவரி 7...!  ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக்..! நீங்க  ரெடியா..?

சுருக்கம்

jallikatu going to held on 7th jan 2017 in ecr road chennai

வரும் ஜனவரி 7 ஆம் தேதி  சென்னையில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது

ஆண்டு தோறும் பொங்கல் திருநாளை  ஒட்டி, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.இந்நிலையில் சென்ற ஆண்டு நடந்த மெரீனா புரட்சி யாருக்கும் மறந்து  இருக்காது.

இதனை தொடர்ந்து இந்த  ஆண்டு,தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு,ECR  சாலையில் நடைபெற உள்ளதாக  தற்போது தகவல் வெளியாகி உள்ளது

மதுரையில் அலங்காநல்லூர்,பாலமேடு,அவனியாபுரம் ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றன.இதில்  காளைகள்  சீறி  பாய்ந்து வந்த அற்புத காட்சியை மக்கள் பார்த்து ரசித்தனர் 

தமிழகம், கர்நாடகா அரசுகள் இயற்றிய சட்டங்களை எதிர்த்து,விலங்குகள் ஆர்வல அமைப்பான, 'பீட்டா' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இருந்தாலும் ஒருமித்த  கருத்தாலும், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு காரணமாக, ஜல்லிக்கட்டு  நடத்த  அனுமதி கிடைத்தது

ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக்

பொங்கலுக்கு வாடி வாசல் வழியே காளைகள் துள்ளி வருவது போலவே சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற புரட்சியை அடுத்து ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக் போட்டி நடைபெற  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் ஜனவரி 7  ஆம் தேதி நடைபெற உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளதால்,ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை  மேலும்  உற்சாகம் அடைய  வைத்துள்ளது

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!