
ஆணவ கொலை செய்ய நினைப்பவர்கள் இனி நீதிமன்ற தீர்ப்பை பார்த்து பயப்படுவார்கள் என்றும் ஆணவ கொலையை தடுக்கும் வகையில் சிறப்பு சட்டம் வேண்டும் என்றும் சங்கரின் மனைவி கவுசல்யா கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்ற இளைஞர், கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்ததை பொறுக்காத கவுசல்யா குடும்பத்தார் கூலிப்படையை கொண்டு கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பல் சங்கரை வெட்டிக்கொலை செய்தது. அவரது மனைவி கவுசல்யாவையும் அந்த கும்பல் வெட்டியது. கவுசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்றரை வருடங்களுக்கு மேல் நடந்த இந்த வழக்கில், திருப்பூர் நீதிமன்றம், 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆள் தண்டனையும், மூன்றே பேரை விடுதலை செய்தும், மீதி உள்ளவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கியது.
ஒன்றே முக்கால் ஆண்டுகள் நடந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 6 பேருக்கு தூக்குத்தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மூன்றுபேரை விடுதலை செய்தும், மீதியுள்ளவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கியது.
தீர்ப்புக்கு பிறகு கவுசல்யா பேசும்போது, நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற மூவர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கவுசல்யா, இன்று உடுமலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆணவ கொலையில் தனது தாயார் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறினார். தம்பிகள் உடனிருக்கும் புகைப்படத்தை தவறாக விமர்சிக்கிறார்கள்
என்றார். சமூக ஊடகங்களில் பலர் மனநோயாளிகளைப்போல் செயல்பட்டு வருகின்றனர். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
என்னை மகளாகவே அவர்கள் நினைக்கவில்லை. அவரை அப்பா என கூற வேண்டாம். திருமணமாகி 8 மாதங்கள் கழித்து கொலை செய்ய நினைத்தவர்களுக்ளு இன்னமும் என்ன செய்யலாம் என்றே அவர்கள் யோசிப்பார்கள்.
சாதிய கௌரவ கொலைக்காக தனிச்சட்டம் கேட்டுள்ளோம். அதற்கான களப்போராட்டமும் நடத்த உள்ளோம். சாதி எவ்வளவு கேவலமானது என்பதை எடுத்துரைக்க உள்ளோம்.
பயப்படுவார்கள். என்று கவுசல்யா கூறினார்.